உள்நாட்டு செய்தி
பத்தனையில் சிறுத்தைத் தாக்குதல்; ஒருவர் காயம்
திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார்.
இதன்போது குழியினுள் பதுங்கியிருந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர் 46 வயதுடைய மாரிமுத்து புஸ்பராஜ் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.