உள்நாட்டு செய்தி
சிறுவர்களை அறைக்குள் பூட்டி வைத்த தாய் கைது !

பேலியகொடையில் இரண்டு சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.09 வயதான சிறுமியும் 13 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சித்திரவதை செய்தமைக்காக சிறுவர்களின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.களனியை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் தொழிலுக்காக சென்று வீடு திரும்பும் வரை, பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் அறைக்குள் பூட்டி வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதனூடாக சிறார்களின் கல்வி, போசாக்கு மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.குறித்த சிறுவர்களை பாதுகாப்புக் கருதி பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.