Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழ் அரசியல் கைதி விடுதலை !

Published

on

  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு மேல்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.2006ஆம் ஆண்டு கொழும்பு – பித்தளை சந்தியில், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் ஆருரன் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார்.