Connect with us

முக்கிய செய்தி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

Published

on

உலகின் முன்னணி எரிபொருள் விநியோகஸ்தர்கள் விநியோகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாலும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் எரிபொருள் தேவை குறைந்ததாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியெட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.48 டொலராகவும் குறைந்துள்ளது.

கடந்த 4 வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிற நிலையில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் விலை இவ்வாறு தொடர்ச்சியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.