Connect with us

முக்கிய செய்தி

டெங்கு வைரஸின் 3 ஆவது திரிபு பரவுகிறது

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறியப்படுத்தியுள்ளார்டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு காவல்துறையினருக்கும், முப்படையினருக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இது 49 சதவீதமாகும் தற்போது, டெங்கு வைரஸின் 2 ஆம் மற்றும் 3 ஆம் திரிபுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. மேலும் 14 வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸின் 3 ஆவது திரிபு பரவுகிறது.டெங்கு நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், டெங்கு நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.நோய் தடுப்புக்காக பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ் விரிவான வேலைத்திட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக மாகாண பிரதம செயலாளர்கள் நேற்றைய சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.எனினும், டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சுகாதாரத் துறைகளின் தலையீடு மாத்திரம் போதாது என்றும், அதற்கு பொது மக்களின் ஆதரவும் தேவை என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.