முக்கிய செய்தி
அதிபர் தரம் III ஆட்சேர்ப்பு – நேர்முகத் தேர்வுக்கான திகதி அறிவிப்பு
பாடசாலை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.
இந்த நேர்முகத்தேர்வு எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும் என அந்த அறிவிப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.