உள்நாட்டு செய்தி
கடலில் மூழ்கிய இருவர் மீட்பு
வெள்ளவத்தை கடற்பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை (மே 06) மீட்டுள்ளனர்.வெள்ளவத்தை கடற்கரையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் இரண்டு இளைஞர்களையும் மீட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் 17 மற்றும் 15 வயதுடைய மாளிகாவத்தையைச் சேர்ந்தவர்களாவர்.குழந்தைகளை கடலில் குளிப்பதற்கு அனுமதிக்கும் போது பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும், நாடு முழுவதிலும் பதிவாகும் பல நீரில் மூழ்கி பலியாகுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளே எனவும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்