உள்நாட்டு செய்தி
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 5 பேர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெனிவெல்கொல பிரதேசத்தில் இன்று (7) வேன் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்விபத்தின்போது காயமடைந்தவர்களில் ஒரு ஆணொருவர், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் வேனில் அத்தனகல்ல பிரதேசத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரொன்று வேனின் பின்பகுதியில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.