முக்கிய செய்தி
மனைவியை தீ வைத்து கொன்றதாக, தீக்காயங்களுடன் சிகிச்சைபெறும் கணவர் கைது!
மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சேதவத்தை பிரதேசத்தில் வசித்துவந்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 24ஆம் திகதி கொட்டுவில பாடசாலைக்கு முன்பாக வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.அதன்போது, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர், மனைவியையும் கட்டியணைத்துள்ளார்.இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவந்த 44 வயதான மனைவி நேற்று உயிரிழந்ததாக காவல்துறையினர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தனர்.சிகிச்சை பெற்று வரும் கணவர் (54) வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.