உள்நாட்டு செய்தி
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது
சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தேசிய ரீதியாக தொழிற்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையில் கடந்த வருடம் நடாத்திய சுற்றாடல் போட்டியில்வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு விருது வழங்கி வைக்கும் தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இன்று (28.04.2023) இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கெளரவ அதிதியாக சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து சிறப்பித்தனர்.இவ்விருது வழங்கும் நிகழ்வில்சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தேசிய விருதைப் பெற்றுக்கொண்டது.இதனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபா பெற்றுக் கொண்டார்.சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கமத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர்சுபுன் பதிரகே கலந்து கொண்டதுடன்,நிலைபேறான இயற்கை வளங்களை முகாமைப்படுத்துவதன் ஊடாக சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலைபேறான சூழலியல் முகாமைத்துவத்திற்கு தலைமை வகித்தல்., சிறப்பான கழிவு முகாமைத்துவம் போன்ற வற்றை கருத்தில் கொண்டே இவ்விருது வழங்கப்படுகிறது.