முக்கிய செய்தி
நுவரெலியா மாவட்டத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுமே முதலாம் ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுநகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகார சட்டத்திற்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதியினால் யோசனைதிட்டம் முன்வைக்கப்பட்டிருந்ததுநுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி பணிகள் நுவரெலியா நகரின் சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்இந்த நிலையில் குறித்த யோசனை திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.இன்றைய சந்திப்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்