Connect with us

முக்கிய செய்தி

ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

Published

on

பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (25) ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.