முக்கிய செய்தி
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பிராந்தியத்தில் பாரிய நிலநடுக்கம்
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பிராந்தியத்தின் Kermade தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.நிலநடுக்கம் காரணமாக உயிரிசேதம் ஏற்படவில்லை என்பதுடன் கடற்கரையை அண்மித்துவசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் நியூஸிலாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்இதேவேளை நிலநடுக்கம் காரணமாக ஹவாய் மற்றும் பசிபிக் பகுதிகளுக்கு எந்தவித அச்சுறுத்தல் இல்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.