Connect with us

உள்நாட்டு செய்தி

பேருந்துகளை ஒழுங்குபடுத்தும் புதிய டிஜிட்டல் வேலைத்திட்டம் அறிமுகம் !

Published

on

எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளையும் ஒழுங்குபடுத்தும் புதிய டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, அனைத்து பேருந்துகளையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் வசதி, வீதி அனுமதி வழங்கும் போது முன்பு வழங்கப்பட்ட புத்தகத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் அட்டை என்பன அறிமுகப்படுத்தப்பட்டது.