உள்நாட்டு செய்தி
குடிவரவு அதிகாரிகள் ஐரோப்பிய விசா மோசடியை முறியடிப்பு
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல முற்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன, அதில் இருந்து தூதரக அதிகாரிகளும் இலங்கையர்களுக்கான விசா நடைமுறைகள் உட்பட விவகாரங்களைக் கையாளுகின்றனர்.இதன்மூலம், தரகர்களின் உதவியுடன் தவறான ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விசா பெறுவதற்காக இந்தியாவுக்குச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.போலி ஆவணங்களை பயன்படுத்தி மோல்டாவிற்கு வீசா பெற்று இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல எண்ணிய இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் புதிய விசா மோசடியை முறியடிக்க சுங்க அதிகாரிகள் வழிவகுத்தது.