முக்கிய செய்தி
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பான நிலைப்பாடும் பரிந்துரைகளும் – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் முன்வைப்பு
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நீதி அமைச்சரிடம் முன்வைத்துள்ளது..
குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஊடக வெளியீடு வருமாறு
“தற்போது வெளியிட்டிருக்கும் மேற்படி பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைவு தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பரிந்துரைகளை, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது எமது அமைப்பின் உறுப்பினர்கள் குழுவும், சிவில் சமூக அமைப்பினரும் இணைந்து அமைச்சரை சந்தித்து மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும்போது பயங்கரவாதம் தொடர்பில் சரியான வரைவிலக்கணத்தை குறிப்பிட்டு , அதற்கான கட்டளை விதானங்களை அமல்படுத்த வேண்டும் என்பதை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அரசியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டிருக்கும் கருத்து சுதந்திரம் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம், சிவில் உரிமைகள் போன்றவற்றுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடாது என்பது வலியுறுத்தியுள்ளது. மேலும் பயங்கரவாத செயலுடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு , தடுப்பு காவலில் வைப்பதற்கான நீதிமன்றத்தின் வகிபாகத்தை முழுமையாக உறுதி செய்வதின் தேவையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் வரைவில் x பிரிவின் ஊடாக மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்கும் அவசரகால சட்ட ஒழுங்கு முறைகளின் ஊடாக, அமைப்புகளுக்கு தடை விதித்தல், குறிப்பிட்ட இடங்களை தடை செய்யப்பட்ட இடங்களாக பிரகனனப்படுத்துதல் போன்ற விடயங்களை மேற்கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இந்த பிரிவை அகற்றி தற்போது அமுலில் இருக்கும் சட்டங்களின் கீழ் மேற்படி நடவடிக்கைகளை பாராளுமன்றத்தின் நடைமுறைகளுக்கு கீழ் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
நீதித்துறை அமைச்சர்னருடனான கலந்துரையாடலின் போது, எமது உறுப்பினர் குழு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக முன் வைத்திருந்தது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் மூன்று முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமுலில்
இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும், தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் பயங்கரவாத சவால்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்களை நிறைவேற்றுவதை நாம் வரவிருக்கின்றோம். ஆனாலும் தற்போது வரைவு செய்யப்பட்டு இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தில் சில விடயங்கள் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மேலும் அந்த திருத்த நடவடிக்கைகளின் போது அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பவற்றை வலியுறுத்தியது.”
சுனில் ஜயசேகர,
தலைமைச் செயலாளர்,
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்