உள்நாட்டு செய்தி
எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான திட்டம் விரைவில்-ஜனாதிபதி
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.