Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை நாளை மறுநாள் ஆகிய தினங்களில் மட்டுமே பாராளுமன்ற அமர்வுகளை நடத்த முடிவு

Published

on

இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் வரையறை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் மட்டுமே பாராளுமன்ற அமர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தை நடத்தாமல் இருக்க இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று அச்சம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.