Sports
AUS WMN won by 19 runs

தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதையடுத்து 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.
அதனடிப்படையில் மகளிர் T20 உலகக் கிண்ணத்தை 6 முறையாகவும் அவுஸ்திரேலியா அணி தனதாக்கி கொண்டுள்ளது.