Connect with us

முக்கிய செய்தி

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்: மூவர் பலத்த காயம்

Published

on

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்: மூவர் பலத்த காயம்

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியூடாக தலவாக்கலையை நோக்கி சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கவரவண்டி சாரதியுமாக 7 பேர் உயிரிழந்தனர் அதே இடத்தில் வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் பயணித்த மூன்று ஆண்கள் பலத்த காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.