உள்நாட்டு செய்தி
தற்போதைய கொவிட் நிலவரம்
நேற்று 569 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தொற்றாளர்கள் – 569
மரணங்கள் – 8
மொத்த மரணங்கள் – 240
மொத்த கொவிட் தொற்றாளர்கள் – 48,949
பேலியகொட, மினுவாங்கொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் இதுவரை தொற்றுக்குள்ளனவர்கள் – 45,186
குணமடைந்தோர் – 42,091
சிகிச்சையில் – 6,618
இதுவேளை நேற்று தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பை பேணிய 10 பேரும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் எதிர்வரும் 13 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் பாராளுமன்ற பணிக்குழாமிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதுவரை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அவருடனும், ஹக்கிமுடனும் தொடர்பில் இருந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய எம்.ஏ.சுமந்திரன், கயந்த கருணாதிலக்க மற்றும் தலதா அத்துக்கோரள ஆகியோருக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதியாகியுள்ளது.
எனினும் தாம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்க போவதாக சுமந்திரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுவரை 31 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.