உலகம்
இலங்கைக்கு 6 மாதங்கள் அவகாசம் வைத்துள்ள பங்களாதேஷ்

இலங்கைக்கு 6 மாதங்கள் அவகாசம் வைத்துள்ள பங்களாதேஷ்200 மில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.நீண்ட கால பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு இலங்கை கோரியதையடுத்து இது இடம்பெற்றுள்ளது.மே 2021 இல் இலங்கை பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டாலர் கடனாகப் பெற்றது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கடனை அடைக்க வேண்டும் எனவும், ஆனால் அவ்வாறு செலுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய காலக்கெடுவின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கடனை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.