Connect with us

முக்கிய செய்தி

வருமான வரி செலுத்தாது இயங்கும் சில நிறுவனங்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்பாடு

Published

on

மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதை தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார நிபுணரான டாக்டர் நிஷான் மெல் தெரிவித்துள்ளார்.

வரி வருவாயை அதிகரிக்க அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பலவீனங்கள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்தால் முறையாக வரிகளை வசூலிக்க முடியவில்லை என பொருளாதார நிபுணரான வெரிட்டி ரிசர்ச்சின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் மேலும் சுட்டிக்காட்டினார்.