உள்நாட்டு செய்தி
கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயர்வு

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று 2 பேர் கொவிட் தொற்றுறுதியாகி உயிரிழந்துள்ளனர்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் மற்றும் 78 வயதான அலவ்வ பகுதியைச் சேர்ந்த பெண் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்
இதேவேளை மேலும் 269 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,247 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.