Connect with us

உள்நாட்டு செய்தி

“எவரையும் கைவிடாதீர்”

Published

on

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.