உள்நாட்டு செய்தி
“1000” இழிபறியுடன் தொடரும் பேச்சுவார்த்தை

1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாளிமார் சம்மேளன பிரதநிதிகளுக்கும், தொழிற்சங்க பிரதநிதிகளுக்கும் இடையில் நேற்று (21) தொழில் அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழில் அமைச்சர் இதனை கூறினார்.
“கூட்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள தவறும் பட்சத்தில் மாற்று வழியை கையாள்வது பற்றி சிந்திப்போம். அரசாங்கத்தால் 1000 ரூபா வழங்க முடியாது. மாறாக தோட்ட கம்பனிகளுக்கு அதனை வழங்குமாறு உத்தரவிட முடியும். 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆனால் அதற்கு தொழிற்சங்கங்கள் இணங்கவில்லை.”என்றார்.