Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் வழங்கியுள்ள உறுதி

Published

on

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

விசேட காணொளி ஒன்றை வௌியிட்டு பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருந்து, உணவு மற்றும் உரம் வழங்குவதற்கான ஆதரவு குறித்து குறித்த அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது கூறினார்.

இரு சர்வதேச நிதி நிறுவனங்களின் சந்திப்பிற்கு இணையாக சர்வதேச சம்மேளனமொன்றை அமைப்பது தொடர்பில் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்ததாக விளக்கமளித்த பிரதமர், எதிர்வரும் வாரத்திற்கான எரிபொருள் தேவைக்கு செலுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்திற்கு உடனடி சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கு வேறு மாற்று வழிகளை அரசாங்கம் தற்போது கவனித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நாளை (16) கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் என்றும், கடந்த இரண்டு நாட்களில் தாம் நடத்திய சந்திப்புகளின் பின்னர் நாளை (16) நாட்டின் நிதி நெருக்கடி குறித்து முழுமையான அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.