Connect with us

Helth

அரக்கனின் அட்டகாசம்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. 

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 679 பேரும், ஜெர்மனியில் 838 பேரும், பிரேசிலில் 811 பேரும் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 59 இலட்சத்து 74 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 10 இலட்சத்து 52 ஆயிரத்து 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தொற்றால் இதுவரை 16 இலட்சத்து 80 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்


அமெரிக்கா – 3,20,730

பிரேசில் – 1,85,687

இந்தியா – 1,44,789

மெக்சிகோ – 1,16,487

இத்தாலி – 67,894

இங்கிலாந்து – 66,541

பிரான்ஸ் – 60,229

ஈரான் – 53,273

ஸ்பெயின் – 48,926