Helth
மேல் மாகாண மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மக்கள் பொறுப்பற்ற நடந்துக் கொண்டால் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 22 ஆம் 23 திகதிகளில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் நிலைமையை அவதானித்தால் நாட்டை மூடக்கவோ, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நடைமுறைப்படுத்தவோ அவசியம் இல்லை என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.