Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

Published

on

8 மாவட்டங்களுக்கு இன்று (11) பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

பதுளை, களுத்துறை, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மௌசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீரேந்து பிரதேசங்களில் கடும் மழை பெய்துள்ளது.

கடும் மழை காரணமாக காசல்ரீ, கென்னியோன் மற்றும் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 3 அடி வரை உயர்ந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பெய்துவரும் அடைமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.