Connect with us

உள்நாட்டு செய்தி

A/l பரீட்சை இன்று

Published

on

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை இன்று (07) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவிக்கின்றார்.

இம்முறை உயர்தர பரீட்சை இன்று (07) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலேயே 29 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2,437 மத்திய நிலையங்களில் 279,141 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இதேவேளை, பரீட்சை மத்திய நிலையங்களில் இலத்திரனியல் சுவர் கடிகாரத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மலையக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவா்கள் மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் ஆகியோர் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.