தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதை அண்டியுள்ள சென்கூம்ஸ் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 46 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றும் அங்கு 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்கூம்ஸ்...