Connect with us

Sports

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ரவிசாஸ்திரி

Published

on

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகியுள்ளார்.

இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றைய T20 உலகக் கிண்ணத்தின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. 

நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் எதிர்வரும் 17 ஆம்திகதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் IPL கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள அகமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.