Connect with us

உள்நாட்டு செய்தி

கொட்டகலையிலும், ஹப்புத்தளையிலும் கொவிட்

Published

on

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 28 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கொட்டகலை ஹெரின்டன் கிராமம், போரஸ்ரிக், மவுண்ட்வேனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டரத்மலை, தொட்டுலாகலை மற்றும் தபேதென்ன ஆகிய தோட்டங்களில் வசிக்கும் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாங்கொட பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் ஊழியர்கள் 18 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.