Connect with us

உள்நாட்டு செய்தி

சென்னையில் கோலியின் கால்களில் விழுந்த மும்பை

Published

on


IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் கிறிஸ் லின் மாத்திரம் 49 ஓட்டங்களை பெற்றார்.

அணியின் பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஏ.பி.டிவிலியர்ஸ் அதிகூடிய 48 ஓட்டங்களை பெற்றார்.

மும்பை அணியின் பந்து வீச்சில் மெக்ரோ ஜென்சன் மற்றும் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்ஷல் பட்டேல் தெரிவானார்.

இதேவேளை இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளன.