உள்நாட்டு செய்தி
மேலும் நான்கு பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதோச நிறுவனம் நான்கு பொருட்களின் விலையை குறைத்துள்ளது.இதற்கமைவாக உள்நாட்டு சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும்.16 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள உள்நாட்டு பச்சரிசியின் புதிய விலை 189 ரூபாவாகும்.அத்துடன் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.உள்நாட்டு நாட்டரிசி 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 198 ரூபாவாகும்.