Uncategorized
புதிய தேசிய கொள்கை ஆணைக்குழு
தேசிய கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உப குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தேசிய கொள்கைகளை ஒழுங்குமுறையுடன் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை மாதிரியை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் உபகுழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கை உருவாக்கத்தின் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான சமீபத்திய தேசிய சட்டமன்ற துணைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.கொள்கை வகுத்தல், அமுல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்கான சுயாதீன அமைப்பாக சட்டத்தின் மூலம் இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.