Connect with us

உள்நாட்டு செய்தி

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை -ஜனாதிபதி

Published

on

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.