Connect with us

உள்நாட்டு செய்தி

“எவரையும் கைவிடாதீர்கள்” விண்ணப்பம் கோரல் நீடிப்பு

Published

on

“எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் இதற்கான முடிவுத் திகதி தற்போது நீடிக்கப்பட்டிருப்பதனால் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

இதன்படி தற்போது உதவித்தொகையைப் பெற்று வரும் சமுர்த்தி, வயோதிபர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்கள், பொதுமக்கள் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட அனைத்துப் பயனாளிகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளும் நலன்புரி நன்மைகளைப் பெற எதிர்பார்த்திருப்பவர்களும் இப்புதிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் இணைய தளத்தில் (www.wbb.gov.lk) இதற்கான விண்ணப்ப ப்படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அப்பிதேசத்துக்குச் சொந்தமான பிரதேச செயலாளர் அலுலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.