உள்நாட்டு செய்தி
மேலும் 3 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,556 ஆகும்.
நாட்டில் புதிதாக 83 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை 665,626 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 14 லட்சத்து 58 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 6 ஆயிரத்து 722 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 14 லட்சத்து 32 ஆயிரத்து 748 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 18 ஆயிரத்து 751 பேர் உயிரிழந்துள்ளனர்.