Connect with us

உள்நாட்டு செய்தி

Antigen பரிசோதனை தொடரும்

Published

on

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு செல்வோரால் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனவே பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய ஆவணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.